விடுதலை பாகம்2 – தெனந்தெனமும் – பாடல் வரிகள்
இசைஞானி இளையராஜா இசையில் தெனந்தெனமும் பாடல் வெளியாகி வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இசையமைப்பு: இளையராஜா
பாடலை பாடியவர்கள்: இளையராஜா & அனன்யா பட்
பாடல் வரிகள்:
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்னத் தொலைகிறதே
கணங்கணமும் என்னயிழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்னத் தொலைகிறதே
தெனந்தெனமும்..
ம்…
மொதன் மொதலா..
பார்வ பட்ட நேரத்திலே..
வெதம் வெதமா..
எண்ணக்குயிலு கூவியதே..
கவனமில்ல..
ஏதோ என்னத் திருப்பியதே..
எங்கிருந்தோ.. கேட்டதெல்லாம் இசையாச்சே..
ஒரு வலைக்குள்ளே மனம் விழுந்ததுவே
அந்தச்சுழலவிட்டு வெளி வரவில்லையே
ஏம்பாட்டத்தான் அடி நீ பாடுற
என் வார்த்த எனக்காக்குற
ஒட்டிகிட்ட சிட்டு ரெண்டு
ஒன்ன சுத்தி ஒன்னுவர
முத்துமழை வானம் கொட்டும் இதமாக
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்னத் தொலைகிறதே
தெனந்தெனமும் ஓன் நெனப்பு…
காத்திருப்பேன்..
நீ நடக்கும் வழிபாத்து..
காத்தசஞ்சா..
குதிக்கும் மனம் அடங்காது..
வாசலிலே..
கோலம் மேல பூப்போல..
ஒன்னப்பாத்தா..
தவிப்பு அடங்கும் படுத்தாது..
நான் தனிச்சிருக்கேன்
உள்ளம் தவிச்சிருக்கேன்
ஓன் குளிர் முகத்தால்
அதத் தடுத்திருக்கேன்
நமக்காகத்தான் பூமி உருண்டோடுதா
பகலோடு இரவாகுதா..
நட்சத்திரம் கண்சிமிட்ட
கிட்டவந்து கட்டிக்கொண்டு
தோளில் தலை சாய்க்கவேண்டும் இதமாக
தெனந்தெனமும் ஓன் நெனப்பு
வளைக்கிறதே என்னத் தொளைக்கிறதே
கணங்கணமும் என்னயிழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல
தெனந்தெனமும்..
ம்…
(- பாடல் முடிவு -)
#விடுத்தலை2
#Ilaiyaraja