குறிப்புபகுத்தறிவு

தமிழ் மறவர் கீ வை. பொன்னம்பலனார்

ponambalanaar-jayankondam1

பழுத்த ஆத்திகராய் இருந்து பெரியாரின் குடியரசு என்னும் இதழைப் படித்தும் பெரியார் பேச்சைக் கேட்டும் பகுத்தறிவாளரானவர்.

எப்பொழுதும் கருப்புச் சட்டை அணிந்து பள்ளிக்குச் செல்லும் வழக்கம் உடையவர்.

கனகசபை யாக இருந்து மறைமலை அடிகளின் தனித்தமிழ்ப் பற்று காரணமாக “பொன்னம்பலம்” ஆனவர்.

நாட்டு வாழ்த்துப் பாடலைத் தமிழ் மொழியில் பாடியதன் காரணமாக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்.
(பெரியார் தலையிட்டதால் அந்தப் பணிநீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது.)

வேலூர் இந்து செகண்டரி பாடசாலையின் பெயரில் காணப்பட்ட இந்து என்னும் சொல்லை பெருமுயற்சி செய்து நீக்கி அந்தப் பள்ளியை நிறுவிய கந்தசாமி கண்டர் பெயரைச் சூட்டியவர்.

பாரதிதாசனின் கவிதைகளில் சில சமற்கிருத சொற்கள் இடம்பெற்றதைச் சுட்டி காட்டியதால் பாரதிதாசன் இனிமேல் வடசொல் கலவாமல் எழுதுவதாக உறுதி கொள்ள காரணமாவர்.

சேலம் நகராண்மை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் இவரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியாரின் தொண்டராக இருந்து கொண்டு பெரியாருக்கும் தனக்கும் மொழிக் கொள்கையில் கருத்து முரண் உண்டு என்று பெரியாருக்கு முன்னிலையில் துணிச்சலுடன் கூறியவர்

1957 ஆம் ஆண்டில் சேலம் தமிழ்ப் பேரவை நடத்திய விழாவில் பெரியாரால் #தமிழ்மறவர் என்னும் பட்டம் வழங்கப்பட்டவர்.

இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் நமது மாவட்டம் செந்துறை அருகில் கீழ மாளிகை என்னும் ஊரில் பிறந்தவர்.

பெரியாருடன் இவர் அருகில் நின்றபடி சிலை ஒன்று இன்றும் கீழமாளிகையில் உள்ளது

பிறந்த நாள் : 30-01-1904

Editor

Gavaskee webdesigner from Jayankondam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *