மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் – நடை திறக்கும் நேரம்
மதுரை என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தான். கோயில் நகரமாம் மதுரையில் ஓடும் வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலின் மூலவர்கள் பார்வதியின் அம்சமான அருள்மிகு மீனாட்சி மற்றும் சிவனின் அம்சமான அருள்மிகு சுந்தரேசுவரர் ஆவர். இத்திருக்கோயில் ஆனது காலத்தொண்மை வாய்ந்ததும், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான மதுரை மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
தரிசன தகவல் :
இத்திருக்கோயிலில் கட்டணமில்லா பொது தரிசனத்தோடு விரைவு தரிசனம் செய்ய விரும்புவர்களுக்கான கட்டண தரிசன வரிசைகளும் உள்ளன. சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளை தனித்தனியாக தரிசிக்க ரூ.50/- விரைவு தரிசனக் கட்டணமாகவும், இரு சன்னதிகளையும் தரிசிக்க ரூ.100/- விரைவு தரிசனக் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடை திறக்கும் நேரம்:
அனைத்து நாட்களும் :
காலை: 05:00 AM IST – 12:30 PM IST
மாலை: 04:00 PM IST – 09:30 PM IST
(மார்கழி மாதம் மட்டும் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும்)
நடை சாற்றும் நேரம்: 12:30 PM IST – 04:00 PM IST
திருவிழாவின் மற்றும் சிறப்பு நாட்களின் போது தினசரி பூஜை நேரங்கள் மாறலாம்.
தினசரி பூஜைகள் பூஜை விபரம்:
பூஜையின் பெயர் | பூஜை நடைபெறும் நேரம் |
---|---|
திருவனந்தல் பூஜை (மஹாசோடஷி) | 05:30 AM to 05:45 AM IST |
விளா பூஜை (பாலை) | 06:30 AM to 07:15 AM IST |
காலசந்தி பூஜை (கௌரி) | 10:30 AM to 11:20 AM IST |
மாலை பூஜை (பஞ்சதசி) | 04:30 PM to 05:15 PM IST |
அர்த்தஜாம பூஜை (மாதங்கி) | 07:30 PM to 08:15 PM IST |
பள்ளியறை பூஜை (சோடஷி) | 09:30 PM to 10:00 PM IST |
Madurai Meenakshi Temple Live Streaming: Click here