திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கொள்கைகள்
கொள்கைகள்: தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நெருங்கிய திராவிட பண்பாட்டுக் கூட்டுறவு நிலவப் பாடுபடுவது
தி.மு.கழகத்தின் குறிக்கோள்: அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது.
திமுக கொள்கை பாடல்கள்:
கழகத்தின் கோட்பாடு
- கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தால்
- ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றுதல்
- பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை செய்தல்
- பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் அவற்றுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும்
- மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் – ஒன்றிய கூட்டாட்சியும் உருவாகிடவும் தொண்டாற்றுவது