செய்திகள்

இராஜேந்திரச்சோழன் சிலை நிறுவ இடம் ஆய்வு

cholagangam-1

நாள் : ஜூலை 2026

டெல்லியிலிருந்து இராஜேந்திரச்சோழன் சிலை நிறுவும் பணிக்காக திரு.சச்சிதானந்தன் ஜோஷி கங்கைகொண்டசோழபுரம் வருகை தந்து கள ஆய்வு செய்தார்.

டாக்டர் சச்சிதானந்த ஜோஷி, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA) நிர்வாக மற்றும் கல்வித் தலைவராகவும், அதன் உறுப்பினர் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பிரபல எழுத்தாளர், கவிஞர், நாடகக் கலைஞர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.

சிலை அமைப்பு, அது நிறுவும் இடம் பற்றிய ஆய்வாக இந்த வருகை அமைந்தது. சிலை அளவு அதன் அமைப்புகள் எல்லாம் 32_ எனும் விகிதத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் அவரது ஆட்சிக் காலம் 32 ஆண்டுகள் என்பதை வலியுறுத்தினேன்.
வெற்றிச் சின்னமானப் பொன்னேரியில் (சோழகங்கம்) அது நிறுவுதல் அவர் பெயரை என்றும் தாங்கி நிற்கும் என இடமும் காட்டப்பட்டது.

சிலை எழுவது உறுதியாகிறது.

-ஆர். கோமகன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்

Editor

Gavaskee webdesigner from Jayankondam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *