கடவுள் இருப்பது எங்கே

கடவுள் இருப்பது எங்கே
கோடி கோடியாய்
பணம் செலவு செய்து
கோவில்களை கட்டி
வணங்குகிறோம்
ஒரு ஒற்றை மரத்தடியில்
ஒரு கல்லை நட்டு
அதை கடவுள் என்று
வணங்குகிறோம்
பஞ்ச பூதங்களை
கடவுள் என்று
வணங்குகிறோம்
பார்க்கும் பலவும்
கடவுள் என்று
வணங்குகிறோம்
கடவுள் இருப்பது எங்கே?
கல்லிலா
கட்டிடங்களிலா
காண்பவற்றிலா
கடவுள் இருப்பது நம் மனதில்
மனமது ஏற்றுக் கொண்டால்
காணும் எல்லாம்
கடவுளாக தெரிகிறது
நம்பிக்கை ஒன்றே கடவுள்!
- M.R.RAHUNAATHAN
