முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் – ஏன்?
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’! – என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?
இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், கீரை, முருங்கை பிசின் என்று அனைத்தும் கிடைக்கும். முருங்கை கீரை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை மரமாகும். இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு கம்பீரமாக நடந்து செல்வார்.
இதைத்தான் நம் முன்னோர்கள் “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள்.
ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?
