ஆடி மாதம் திருவாதிரை இராசேந்திரச்சோழன் பிறந்தநாள் அரசு விழா கோரிக்கை மனு
ஆடி மாதம் திருவாதிரை இராசேந்திரச்சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக வேண்டும்.
ஏன்?
அவரைப் பற்றி பேசப்படும் பொழுது அவர்காலச் சமூகம் பேசப்படும்.இராசேந்திரசோழன் காலத்தில் கடல்வழிப் பட்டுப்பாதை சோழர் வசமாயின. பெருங்கடல் என்றழைக்கப்பட்ட இந்து மகாசமுத்திரம் சோழர் வசமாகியது.கிழக்கிற்கும் மேற்கிற்குமான வணிகம் தமிழன் வசமாகியது.
முடிகொண்டான், கங்கைகொண்டான், கடாரங்கொண்டான் எனும் விருதுப் பெயர்களுக்குப் பின்னாள் உள்ள வரலாறு இதற்குச் சான்று. தமிழ்நாட்டு வணிகம் புதிய வீச்சை கண்டது. கடல்கடந்த சுதந்திர வணிகம் பல புதிய வர்க்கங்களின் தோற்றுவாய் ஆகிறது. புதிய வர்க்கங்கள் சமூக பொருளியல் முரண்களின் தலைவாய்.இவை சமூக மாற்றத்தினை உந்தித்தள்ளின.வர்க்க முரணைக் கூர்மைப் படுத்தும் கரணிகள். இது இராசேந்திரச்சோழன் காலத்திய புதிய மாற்றம்.
ஆடித்திருவாதிரை நாளை அரசுவிழாவாக்க அரியலூர் மாவட்டத்தை முன்னிலைப்படுத்தும் தமிழக பிற்பட்டோர்நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவசங்கர் அவர்களிடமும் செயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் அவர்களிடமும் ஊர் நாட்டார்கள், தலைவர்கள் உடன்கூட்டத்தாரோடு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
#gangaikondacholapuram
#adithiruvathirai
#cholahistory
#Rajendracholan