குறிப்பு

புதைபடிவ அருங்காட்சியகம் – அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அருங்காட்சியகம்
கட்டிடம் திறக்கப்பட்டது.

Fossil Museum

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி கிராமதில் சுற்றுலா,
பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறையின் வாயிலாக கட்டப்பட்ட புதை உயிரிப்படிவ
அருங்காட்சியகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி
அவர்கள் இன்று (14.08.2019) காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.

இந்த அருங்காட்சியக திறப்பு விழா நேரலையில் மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா
திரு.தாமரை. எஸ்.இராஜேந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் இ.ஆ.ப.
அவர்கள் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் அவர்கள்
கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் தெரிவித்தாவது,

அரியலூர் மாவட்டம், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதோடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக
கடலாக இருந்ததாகவும், அதற்குறிய சான்றுகள், மண், மலை முகடு, படிவங்கள் அரிய வகை
கற்படிவங்கள் மூலமாக கடலாக இருந்ததற்கான சான்றுகள், பல வரலாற்று அறிஞர்களால்
கண்டறியப்பட்டதை அறிந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா
அவர்களால் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அரியலூர்
மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை வாயிலாக சுமார்
ரூ.2 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்க உத்திராவிடத்தினடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களின் சரிய வழியில் செயல்படும் அரசால் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் மூலம் நம்மளுடைய எதிர்கால சந்ததியினர்களுக்கும், பள்ளி
மாணவ, மாணவியர்களுக்கும் உலகம் தோன்றிய வரலாறும், அறிய பல வரலாற்றுச்சுவடுகளும்
வரலாற்று தகவல்கள் அரியலூர் மாவட்டம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலாக
இருந்ததற்கான தகவல்களையும் அறிந்துகொள்ள இயலும்.

தமிழக அரசு தொல்லியல் துறை மூலமாக இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க
இடங்களைக் கண்டறிந்து அகல் ஆராய்ச்சி செய்து, உலகெங்கும் எடுத்துச் செல்லும் பணியில்
தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா
திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்தநிகழ்ச்சியில், புவியியல் பிரிவு காப்பாட்சியர் சு.தனலெட்சுமி, காப்பாட்சியர் சுமாசங்கர்
மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.

Editor

Gavaskee webdesigner from Jayankondam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *