குறிப்பு

வன்னியர் திருமண மண்டபம் திறப்பு விழா

இன்று 25.04.2021 ஞாயிறு #ஜெயங்கொண்டசோழபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க #வன்னியர்திருமணமண்டபம் திறப்பு விழா கண்டது.

1952ஆம் ஆண்டு இந்த இடம் மறைந்த பெரியவர் #கொடுக்கூர்குடிக்காடு கிராமத்தைச் சார்ந்த #K_Rவிசுவநாதன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்களால் வாங்கப்பட்டது. இந்த 57 சென்ட் இடத்தில் எத்தனையோ முறை மணடபம் கட்ட முயன்று முடியாமல் போனது, ஆனால் இன்று 3.5 கோடி முதலீட்டில் முழுக்க நன்கொடையால் உயர்ந்து நிற்கிறது.

இவ்விழாவில் புலவர் #துளார்_பாலசுப்ரமணியன் ஐயா தன் 94 வயதிலும் இளைஞரைப் போல் ஆர்வமுடன் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்த மண்டபத்தில் வருகின்ற வருவாய் முழுவதும் #அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய வன்னியர் பிள்ளைகளின் #கல்விவேலைவாய்ப்புவிளையாட்டுத்துறை போன்றவற்றிற்கு வழங்கப்படவுள்ளது.

விரைவில் இந்த மண்டபத்தில் #போட்டித்தேர்வுக்கான இலவச #பயிற்சி_மையம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

– குமார்

Editor

Gavaskee webdesigner from Jayankondam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *